தங்கம் தென்னரசு எங்கள் கணக்கைக் கேட்கட்டும்… முதலில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு பதில் சொல்லட்டும் – அமைச்சர் மரிய வில்சன்
அந்த ரூ.30 ஆயிரம் கோடி எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் மரிய வில்சன், தங்கம் தென்னரசு தங்களது ஆட்சியின் கணக்குகளைக் கேட்பதற்கு முன்பாக, முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கெனவே குறிப்பிட்ட ரூ.30 ஆயிரம் கோடி குறித்துக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“தங்கம் தென்னரசு சார் எங்கள் ஆட்சியின் கணக்குகளைக் கேட்கட்டும். முதலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன ரூ.30 ஆயிரம் கோடி எங்கே? அதற்கு முதலில் அவர் பதில் சொல்லட்டும்” என்று கூறிய மரிய வில்சன், இந்த விவகாரம் தொடர்பாகச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




