--- --:--:-- --

கூடுதல் ஸ்லீப்பர் பெட்டிகள் இணைப்பு!

3

நவராத்திரி முன்னிட்டு ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற பூஜை பண்டிகை நாட்களை மற்றும் வாரவிடுமுறை போன்ற தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் ராமேஸ்வரம் வரும் பயணிகள் கூட்ட நெரிசலில் பயணம் செய்வதை தடுக்க ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

 

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் படி ராமேஸ்வரம் – தாம்பரம் பாம்பன் விரைவு ரயில், ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில், ராமேஸ்வரம் – திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்கள் கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

 

 

தாம்பரம் – ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் (வண்டி எண் – 16103) அக்டோபர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 19-ம் தேதி வரை. (வண்டி எண் – 16104 ) ராமேஸ்வரம் – தாம்பரம் பாம்பன் விரைவு ரயிலில் அக்டோபர் 16-ம் தேதி முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை இயக்கப்படும்.

 

 

சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் விரைவு ரயில் (வண்டி எண் 16751) அக்டோபர் 16-ம் தேதி முதல் அக்டோபர் 18 வரை, ரயில் எண் 16752 – ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண் – 16752) அக்டோபர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை இயக்கப்படும்.

 

 

ராமேஸ்வரம் – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் ( ரயில் எண் 16344) அக்டோபர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 19-ம் தேதி வரை. திருவனந்தபுரம் – ராமேஸ்வரம் அமிர்தா விரைவு ரயில் (வண்டி எண்) 16343 அக்டோபர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை இந்த சிறப்பு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon