--- --:--:-- --

ஆதவ் ஆர்ஜுனாவுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை!

10

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அ.தி.மு.க.வு-க்கும் – தி.மு.க-வுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகப் பேசி இருந்தார். அவரின் இந்தப் பேச்சு அ.தி.மு.க-வின் பெயருக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆதி ராஜாராம் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

 

 

அதில், “மதுராந்தகம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க நிர்வாகிகள் இரட்டை இலை அல்லது சுயேச்சை சின்னத்துக்குப் பதிலாக தி.மு.க-வின் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டதாகவும், பதிலுக்கு தி.மு.க-வினர் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டதாகவும், சுமார் 70 லட்சம் பணப்பட்டுவாடா மூலம் வாக்குகள் மாற்றப்பட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா பேசி இருந்ததார்” என்று கூறப்பட்டு இருந்தது.

 

 

மேலும், “​எந்தவித ஆதாரமுமின்றி, உள்நோக்கத்தோடு கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அ.தி.மு.க தொண்டர்களைக் தனது கட்சிக்கு இழுக்கும் நோக்கிலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்” எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon