--- --:--:-- --

முதலமைச்சர் விஜய் நாளை கேரளா குருவாயூர் கோயிலுக்கு செல்ல திட்டம்!

2

கோவையில் பெரியார் அறிவுலகத்தை நாளை திறந்து வைக்க உள்ள முதல்வர் விஜய், நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை நாளை காலை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைக்கிறார்.

 

 

இதில் கலந்து கொள்வதற்காக நாளை காலை சென்னையில் இருந்து 11 மணி அளவில் விமானம் மூலம் தமிழக முதல்வர் கோவை வருகிறார். கோவை விமான நிலையம் வர உள்ள முதலமைச்சர் விஜய் அங்கிருந்து காந்திபுரம் வரை சாலை மார்க்கமாக செல்ல உள்ளார். இதற்காக சாலையில் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 13 கி.மீ தூரம் சாலையின் இரு புறங்களிலும் இந்த தடுப்புகள் அமைக்கப்படுகின்றது.

 

 

கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த தடுப்புகள் கொண்டு வரப்பட்டு அமைக்கப்பட்டு வருகின்றது. கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் 50 பேர் மட்டும் நிற்கும் அளவிற்கு பாக்ஸ் வடிவிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

 

இந்நிலையில் கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலமாக நாளை மதியம் 2 மணிக்கு திருச்சூர் குருவாயூர் கோயிலுக்கு முதலமைச்சர் விஜய் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் ஆந்திரா சென்ற முதலமைச்சர் விஜய் அங்கு பிரசித்திபெற்ற கனகதுர்கா கோவிலில் வழிபட்டு சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon