பாட்ஷா சீன், சர்ப்ரைஸ் கேமியோக்கள் வேற லெவல்!
லட்சுமி காந்த் ட்விட்டர் விமர்சனத்தில் கூறியிருப்பதாவது: கலகலப்பான மற்றும் மாஸ் நிறைந்த முதல் பாதிக்குப் பிறகு, இரண்டாம் பாதி அதிரடி சண்டைக் காட்சிகளுடன் பூனை-எலி ஆட்டமாக நகர்கிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உச்சக்கட்ட ஆளுமை.. என்னவொரு திரை ஆளுமை. அனிருத் காட்சிகளை மிகவும் அருமையாக உயர்த்தியுள்ளார். புதிய இசையுடன் முதல் பாகத்தின் பிஜிஎம்-களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டாம் பாதியில் சில இடங்களில் வேகம் குறைகிறது, வில்லன் பகுதியில் எழுத்து இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.இரண்டாம் பாதியின் குறைகளைத் தாண்டி, மாஸ் காட்சிகள் தியேட்டரில் பார்க்க அருமையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளன.
பாட்ஷா சீன், பார்ட்டி சீன், கிளைமாக்ஸ் மாஸ் என்ட்ரி மற்றும் சர்ப்ரைஸ் கேமியோக்கள் தனித்தனியாக நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளன.ஒட்டுமொத்தமாக, மாஸ் தருணங்கள் மற்றும் ஜாலியான தருணங்கள் நிறைந்த ஒரு தரமான என்டர்டெய்னரை நெல்சன் வழங்கியுள்ளார், இது பொதுமக்களிடையே நன்றாகப் வரவேற்பைப் பெறும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





