--- --:--:-- --

தமிழ்நாட்டில் புதிய பால் பொருள் பானத்தை அறிமுகம் செய்த ரிலையன்ஸ்!

4

ஜாய்லேண்ட் எனும் புதிய பால் பொருள் பானத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. கேம்ப கோலா உள்ளிட்ட பானங்களை ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பராட்க்ட்ஸ் நிறுவனம் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் உடனடியாக குடிக்கக் கூடிய பால் பானங்கள் சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்தும் நோக்கில் ஜாய்லேண்ட் என்ற புதிய பால் பொருள் பானத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

 

பால் இடுபொருளாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஜாய்லேண்ட் பால் பானம் வெண்ணிலா மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய இரு வெவ்வேறு சுவைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து கடைகளிலும் 20 ரூபாய் விலையில் சுவை நிறைந்த ஜாய்லேண்ட் பால் பானம் கிடைக்கும் என ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பராடக்ட்ஸ் இயக்குநர் டி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

 

முதன் முதலில் தமிழ்நாட்டில் ஜாய்லேண்ட் பால் பானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் நாடு முழுவதும் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெறுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

தரம், பால் சார்ந்த மூலப்பொருட்கள் மற்றும் விலை குறைவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து அதிகமான குடும்பங்களுக்குப் புதிய தயாரிப்புகளைக் கொண்டு சேர்ப்பதே தங்கள் நோக்கம் என ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பராடக்ட்ஸ் இயக்குநர் டி கிருஷ்ணகுமார் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் புதிய பால் பொருள் பானத்தை அறிமுகம் செய்த ரிலையன்ஸ்!

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon