அக்டோபர் 16-ல் சோலார் விழிப்புணர்வு முகாம்..!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டம் மற்றும் ராமநாதபுரம் கோட்டம் சார்பில், மத்திய அரசின் சோலார் மின்சாரம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் அக்டோபர் 16-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள வசந்தம் மஹாலில் நடைபெறுகிறது.
இந்த முகாமில், வீடுகளில் சோலார் மின் தகடுகள் அமைப்பது, அதற்கான பதிவு நடைமுறைகள், வங்கிக் கடன் வசதிகள், அரசின் மானியத் திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளன.
மேலும், வீடுகளில் சோலார் மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவதற்கு மானியங்கள், அதாவது ஒரு கிலோவாட் சோலார் அமைப்புக்கு மத்திய அரசு சார்பில் ரூ.30 ஆயிரமும் தமிழக அரசு சார்பில் ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.35 ஆயிரம், இரண்டு கிலோவாட் சோலார் அமைப்புக்கு மத்திய அரசு சார்பில் ரூ.60 ஆயிரம், தமிழக அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.70 ஆயிரம் ரூபாய் மானியமும்.
அதேபோல், மூன்று கிலோவாட் சோலார் அமைப்புக்கு மத்திய அரசு சார்பில் ரூ.78 ஆயிரம் தமிழக அரசு சார்பில் ரூ.22 ஆயிரம் என மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94987 94987 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
ஆகையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சோலார் மின்சார அமைப்பை நிறுவ விரும்பும் பொதுமக்கள், இந்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு திட்டத்தின் விவரங்களைத் தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




