--- --:--:-- --

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வக்கிரம்.!

4

திருவாரூர் நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.சம்பவத்தன்று வேலைக்குச் சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்பிய பெண், வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு மறைந்திருந்த ரஜினி சக்தி, அந்தப் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

 

 

அப்பொழுது ஏதோ சத்தம் கேட்கிறது என அலறி அடித்து வெளியே ஓடி வந்து பார்த்தபொழுது அங்கு யாரும் இல்லை. அதனையடுத்து அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பெண்ணை ரஜினி சக்தி பின் தொடர்ந்து வந்து தொடர்ந்து, பேச்சு கொடுத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண் பெற்றோரிடம் தெரியப்படுத்த இருந்தார். அப்போதுதான் ஒரே ஊர் என்பதால் உறவினர் வீட்டு விசேஷத்தில் அந்தப் பெண்ணும், ரஜினி சக்தியும் ஒரு நாள் சந்தித்துக் கொண்டனர்.

 

 

ஒரு வேளை தான் குளிப்பதை மறைந்து இருந்து பார்த்தது, ரஜினிசக்தியாக இருக்குமோ என சந்தேகம் அடைந்த பெண்.. ” உங்களது செல்போனை கொடுங்கள் ஒரு போட்டோ எடுத்து கொண்டு தருகிறேன் ” எனக் கூறி செல்போனை வாங்கியுள்ளார். போட்டோ எடுப்பது போல கேலரியை ஓபன் செய்து பார்க்க ஏற்கனவே தான் சந்தேகித்தது போல அவர் குளித்துக் கொண்டிருந்த வீடியோ இருப்பதைப் பார்த்து அப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

 

 

உடனடியாக யாரிடமும் சொல்லாமல் வீட்டின் பின்னால் சென்று ஆட்டோவை பிடித்து செல்போனுடன் திருவாரூர் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று ரஜினி சக்தியின் வக்கிர புத்தியை அப்பெண் அம்பலமாக்கி உள்ளார். செல்போனை ஆய்வு செய்ய புகாரளித்த பெண் குளிக்கும் வீடியோ மட்டுமல்லாமல் மேலும் பல பெண்களின் வீடியோக்களும் இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக திருவாரூர் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சீனிவாசபுரம் கிராமத்திற்குச் சென்று, ரஜினி சக்தியை அதிரடியாகக் கைது செய்தனர்.

 

விசாரணையில் அவர் மீதான குற்றம் உறுதியானதை தொடர்ந்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நன்னிலம் சிறையில் அடைத்தனர். ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி பல பெண்களை அருவருக்கத்தக்க வகையில் வீடியோவாக எடுத்து செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon