--- --:--:-- --

அயோத்தி சர்ச்சைகுரிய இடம் இந்துக்களுக்கு சொந்தம்! ராமர் கோவில் கட்டலாம்: உச்ச நீதிமன்றம்

breaking 01

அயோத்தி வழக்கில்,சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அங்கு ராமர் கோவில் கட்டவும் அனுமதி வழங்கி உள்ளது.

 

அயோத்தி வழக்கில், பாபர் மசூதி இருந்த இடம் தங்களுக்கானது என்று முஸ்லீம் அமைப்புகள் நிரூபிக்கவில்லை. அயோத்தி நிலத்திற்கு ஷியா வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்வதாக, உச்ச நீதிமன்ற அமர்வு, ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

பாபர் மசூதி இருந்த இடம் தங்களுக்கானது என்று முஸ்லீம் அமைப்புகள் நிரூபிக்கவில்லை என்று தீர்ப்பில் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரித்து வழங்கியது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

நிலத்திற்கு உரிமை கோரும் நிர்மோரி அகாரா அமைப்பின் மனுவிலும் ஆதாரங்கள் இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது. பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரமில்லை. இஸ்லாமியர்களுக்கு மாற்று இடமாக 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை 3 மாதங்களில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.



12 ஆம் நூற்றாண்டில் கோவில் இருந்ததாக, இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. அது வழங்கிய ஆதாரங்களும் வழக்கில் பரிசீலனை செய்யப்பட்டதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களில் நம்பிக்கை. அதை சந்தேகத்திற்கு உட்படுத்த முடியாது. பாபர் மசூதி கட்டப்படும் முன்பு அங்கு இஸ்லாமிய முறையிலான கட்டடங்கள் கிடையாது. சர்ச்சைக்குரிய நிலம், ஆவணங்களின் படி அரசுக்கு சொந்தமானது.

 

அயோத்தியில் தொழுகை நடத்துவதற்கான உரிமையை இசுலாமியர்கள் முழுமையாக இழக்கவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் தவறாந்து.  கோயில் கருவறை தான் ராமஜென்ம பூமி என்பதை மத நம்பிக்கை அடிப்படையில் ஏற்கிறோம். மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததே தவிர ராமர் பிறந்ததற்கான ஆதாரத்தை தரவில்லை.

 

சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் வழிபாடு நடத்தியுள்ளனர். கட்டடம் இருந்தது என்பதற்காக உரிமை கோரிவிட முடியாது. ராமர், சீதையை ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பே இந்துக்கள் வழிபட்டு வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. சர்ச்சைக்குரிய பகுதியில் கட்ட முற்றம் இந்துக்களுக்கானது என்பதற்கான ஆதாரமும் உள்ளது.

 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷன், சந்திரசூட், அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon