--- --:--:-- --

பட்ஜெட்டில் மாணவர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்புகள்!

02

மிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட இருந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் திமுக அரசு 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தது. இந்நிலையில், தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து வருகிறது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து வருகிறார்.

 

பட்ஜெட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கடன் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாகவும், அதிகமான வட்டியை செலுத்தி வருகிறோம் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

 

அதேபோல், 2036க்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்று கூறிய அமைச்சர் மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்புக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வரை வரவு வைக்க முயற்சி, சுரங்க நடவடிக்கைகள் முழுமையான கணினிமயமாக்கல் மூலம் ஏறத்தாழ ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

 

மேலும், பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளிகள் மற்றும் நவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்படும் என்றும் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி, உணவு, சீருடைகள், தங்குமிடம், பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்தார்.

 

மொத்தம் பள்ளி கல்வித்துறைக்கு 44,527 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. அரசு பள்ளிகளில் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது மாணவர்களின் நலனுக்கு அவசியமானதாகும். சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் கழிவறை பராமரிப்பு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் அமைச்சர் அறிவித்தார்.

 

ரூ.277 கோடி மதிப்பீட்டில் 5.32 இலட்சம் 11ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 2026-27 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஹெல்மெட் & வாட்டர் பாட்டில் வசதியுடன் நவீன மிதிவண்டிகள் வழங்கப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon