--- --:--:-- --

தர்பார் பட மோஷன் போஸ்டர் ரிலீஸ்! ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

தர்பார்ர்ர்

தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் கமல் வெளியிட்டார். இது, ரஜினி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘தர்பார்’. நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக, நயன்தாரா நடித்துள்ளார்.

 

தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு அடைந்து, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது திரைக்கு வருகிறது.

 

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் தர்பார் மோஷன் போஸ்டரை, அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதன்படி தமிழில் கமல்ஹாசனும், மலையாளத்தில் மோகன்லாலும், இந்தியில் சல்மான் கானும் தெலுங்கில் மகேஷ் பாபுவும் வெளியிட்டனர். இது, ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon