--- --:--:-- --

இன்றும் 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்..!

6

நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நான்காவது நாளாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

 

ஜன்பத், மண்டி ஹவுஸ், சேவா தீர்த் உள்ளிட்ட முக்கிய மெட்ரோ நிலையங்கள் இன்று காலை 7.30 மணி முதல் பயணிகளுக்காக மூடப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று மூடப்பட்டிருந்த இதே 16 மெட்ரோ நிலையங்கள் மாலையில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், போராட்டம் தொடர்வதால் இன்றும் அவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் தலைநகரின் பல பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மெட்ரோ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon