--- --:--:-- --

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு..!

02

குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. உதவி ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய 525 காலி பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய 748 காலி பணியிடங்களுக்கு குரூப் 2ஏ தேர்வும் அறிவிக்கப்பட்டது.

 

மொத்தமாக 828 காலி இடங்களுக்கு கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் எழுதியிருந்த நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி முதன்மை தேர்வு அறிவிக்கப்பட்டது.

 

ஆனால், தேர்வர்களுக்கான அறை ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மார்ச் 15 அன்று தேர்வு நடந்தது. இதில் 18 ஆயிரத்து 467 பேர் பங்கேற்று தேர்வு எழுதியிருந்த நிலையில், அதற்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

 

 

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடங்குகிறது. இந்த தேர்வு மூலம், துணை ஆட்சியர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் என 26 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், இன்று முதல் அடுத்த மாதம் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon