--- --:--:-- --

டெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

4

ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய மற்றும் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவதை உச்சநீதிமன்றம் 01.09.2025 அன்று வழங்கிய தீர்ப்பில் கட்டாயமாக்கியது.

 

 

அதேநேரம் ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு இந்தத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கும் மேல் பணிவிருப்புக் காலம் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வை வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

அதன்படி தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் ஆசிரியர்களின் வசதிக்காக 3 சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

 

 

அந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான முதல் சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4, 5-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், டெட் தேர்வு தாள் 1, தாள் 11 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon