தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை..!
தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் பிப்ரவரி 21-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், பிப்ரவரி 22-ம் தேதி 22-ம் தேதி திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வட தமிழகத்தில் இந்த 2 நாட்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும்.
20-02-2026: தமிழகத்தில் ஓரிடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
21-02-2026: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
22-02-2026: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




