--- --:--:-- --

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து பக்தர்கள் பலி..!

10

ந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில், பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு சின்டூர்-மாறேடுமில்லி மலைப்பாதை (Ghat Road) பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

 

சுமார் 40 யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு சென்ற அந்தப் பேருந்து, சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களை பல்வேறு கோவில்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது. பல்வேறு கோவில்களை தரிசித்துவிட்டு, தெலங்கானாவில் உள்ள பத்ராச்சலம் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தபோது, சின்டூர்-மாறேடுமில்லி மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 9 பக்தர்கள் உயிரிழந்தனர்.

 

 

விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த பல யாத்ரீகர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள பத்ராச்சலம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. விபத்துக்கான சரியான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon