B.Ed. சேர்க்கை விண்ணப்பம் இன்றுடன் நிறைவு..!
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed. படிப்பிற்கான விண்ணப்பம் இன்றுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது. இதனையடுத்து ஜூலை 18-ல் தரவரிசை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து ஜூலை 21-25 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூலை 28-ல் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு, முதலாமாண்டு வகுப்புகள் ஆக.6-ல் தொடங்கவுள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.





