--- --:--:-- --

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக எப்போது விண்ணப்பிக்கலாம்..?

1

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார்.

 

விடுபட்டவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார்.தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது சுமார் 1 கோடியே 34 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் ’மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் 9000 கோரிக்கை முகாம்கள் நடைபெறும் எனவும், அப்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக தகுதியுள்ள மகளிர் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைய ஜூன் 4ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon