கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் வெளியிட்ட அறிக்கையில், ‘நிகழ் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்படும்.
எனவே, அன்றைய தினத்தில் பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




