--- --:--:-- --

பலூனை விழுங்கிய குழந்தை பரிதாபமாக பலி..!

7

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே 7 மாத ஆண் குழந்தை பலூனை விழுங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரத்தநாடு அடுத்த ஊரணிபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி சதீஷ்குமார் – சிவகாமியின் தம்பதியின் ஏழு மாத ஆண் குழந்தை வீட்டில் படுத்திருந்தபோது திடீரென மூச்சு திணறலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதில் தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தையின் உடலை பரிசோதனை செய்த பொழுது குழந்தையின் தொண்டையில் பலூன் இருந்தது தெரிய வந்திருக்கிறது. குழந்தை பலூனை விழுங்கியதால் தான் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon