--- --:--:-- --

பெயர்ந்து விழுந்த அம்மா உணவகத்தின் மேற்கூரை..!

8

ம்மலில் உள்ள அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனர். தாம்பரம் மாநகராட்சியின் பம்மலில் உள்ள அண்ணாசாலையில் அம்மா உணவகம் அமைந்துள்ளது.

 

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த அம்மா உணவகம் கட்டப்பட்ட நிலையில் மறு சீரமைப்புக்காக 18 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு இதற்கான ஒப்பந்த பணிகள் முடிந்த நிலையில் கட்டுமான பணிகள் துவங்க காலதாமதம் ஏற்பட்டன.

 

இந்த நிலையில் அம்மா உணவகத்தின் மேற்கூரை பேருந்து விழுந்ததில் இரு பெண்கள் காயம் அடைந்தனர். முறையான பராமரிப்பு இல்லாததால் அம்மா உணவகம் செல்ல அச்சமாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon