தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
தென்மேற்கு வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக நாளை தென்கிழக்கு வங்கு கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த இரு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று கூறப்படுகிறது .இதனால் வரும் 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





