சட்டென்று ஆட்சியர் காலில் விழுந்த நபர்..!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான உதவி தொகை கேட்டு மகன் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றதோடு குறைகளை கேட்டறிந்தார்.
அப்பொழுது மூதாட்டி ஒருவர் தனக்கு கால் குறைபாடு உள்ளதாகவும் தனக்கு வழங்கப்பட்டு வந்த மாற்றுத்திறனாளி உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு அளித்த பின்னர் அருகில் இருந்து அவரது மகன் திடீரென மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.






