--- --:--:-- --

திருப்பதி லட்டு விவகாரத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு..!

1

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆதாரம் வெளியிட்ட குற்றச்சாட்டை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக பாஜக சுப்ரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 

எக்ஸ் தலத்தில் சுப்பிரமணிய சுவாமி பகிர்ந்துள்ள பதிவில் திருப்பதியில் லட்டு பிரசாரத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் உள்ள உண்மை தன்மையை தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆதாரம் அற்ற குற்றச்சாட்டை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

திருப்பதியிலிருந்து ஆய்வு செய்ததில் அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon