கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். அமராவதி மாவட்டத்தில் சாலையில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது 30 அடியான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஓட்டுனர் கட்டுப்பாட்டு இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





