--- --:--:-- --

கட்டை பையில் வைத்து சாலையோரம் தூக்கி வீசப்பட்ட குழந்தை..!

6

ரோடு அருகே சாலையோரம் கட்டப்பையில் வைத்து தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் தனியார் மண்டபம் அருகில் ஒரு பையில் பச்சிளம் குழந்தையை சாலையோரம் அடையாளம் தெரியாத நபர் தூக்கி வீசி சென்றதாக கூறப்படுகிறது.

 

இதைத்தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் பச்சிளம் குழந்தையை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குழந்தை யாருடையது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon