--- --:--:-- --

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமல்..!

5

புதுச்சேரியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தர்ஷினி தெரிவித்துள்ளார்.

 

அதற்கு பிறகு 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு பாடத்திட்டம் மாற்றப்பட்டு சிபிஎஸ்சி பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளார். மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்சி வாரியத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon