--- --:--:-- --

பில்லி சூனியம், மாய மந்திரம் கழிப்பதாக கூறி தங்க கம்மலை திருடிய 4 பேர்..!

8

சிவகங்கை அருகே பில்லி சூனியம் கழிப்பதாக கூறி தங்கத்தோடை அபகரித்த நான்கு மர்ம ஆசாமிகளை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சிவகங்கை மாவட்டம் மதகப்பட்டி சத்யா நகர் பகுதியில் சேர்ந்தவரிடம் நான்கு பேர் பில்லி சூனியம் கழிப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அவரிடம் தோடை கேட்டுள்ளார். இதன்பின் இரண்டு கிராம் தங்க தோடை வாங்கி மஞ்சள் தடவி புளியை வைத்து மந்திரித்து தருகிறோம் என கூறியுள்ளனர்.

 

பின்னர் வெறும் புளியை மட்டும் உருட்டி கொடுத்துவிட்டு ஏமாற்றி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அந்த நான்கு பேரை விரட்டி பிடித்து அங்கிருந்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் நான்கு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon