டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்..!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்குதல் தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வுதுறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் டாஸ்மாக் ஊழியர்களின் தீபாவளி போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் 21 சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். பண்டிகை நாட்களில் பணியாற்ற ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கொரோனா காலத்தை கருத்தில் காட்டி 10 சதவீதமாக குறைக்கப்பட்ட தீபாவளி போனஸ் தொகையை தற்போது தொடர்வது சரி இல்லை என்றும் அதிக வருவாயை ஈட்டி வரும் இந்த துறையின் ஊழியர்களுக்கு 20% போனஸ் தரவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
20% போனஸ் வழங்குவது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி உறுதியளித்தார்.





