பெவி குயிக் பசையை வைத்து தம்பியை தீர்த்து கட்டிய அண்ணன்..!
மயிலாடுதுறை அருகே மதுவில் சயனைடு கலந்து கொடுத்து தம்பியை தீர்த்து கட்டிய சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர். குத்தாலம் பட்டம் தத்தங்குடி பகுதியில் கொல்லம் பட்டறை நடத்தி வந்த பழனி குருநாதன் என்பவரும், அவரிடம் வேலை பார்த்து வந்த பூரா சாமி என்பவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
தனிப்படை போலீசார் நடத்திய சாரணையில் சொத்து தகராறு பழனி குருநாதன் சகோதரன் பாஸ்கரன் மதுவில் சயனைடை கலந்து அதனை பெவி குயிக் போட்டு ஒட்டி பட்டறையில் வைத்து விட்டு வந்தது அம்பலமானது.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





