காப்பகத்தில் 8 குழந்தைகளுக்கு திடீர் மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு..!
திருச்சி அருகே ஆதரவற்றோர் காப்பகத்தில் எட்டு கைகுழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் மாம்பழச்சாரி பகுதியில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான ஆதரவற்ற சுமார் 30 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 8 குழந்தைகளுக்கு திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாலில் ஏதேனும் பிரச்சினையா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.





