--- --:--:-- --

காது குத்து நிகழ்ச்சிக்கு வந்த பெண் மீது மின்விசிறி அறுந்து விழுந்து விபத்து..!

7

திருத்தணி முருகன் கோவிலில் காது குத்து நிகழ்ச்சிக்கு வந்த பெண் மீது மின்விசிறி அறுந்து விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் ஆர்சிபி மண்டபத்தின் உறவினர் குழந்தைக்கு நடந்த காதுகுத்து விழாவிற்கு சென்று வந்தார்.

 

அப்பொழுது மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சீலிங் ஃபேன் எதிர்பாராதவிதமாக லக்ஷ்மி மீது விழுந்ததில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு மலைக்கோயிலில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon