ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை ..!
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாசிக், புனே உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.






