மீண்டும் தலைகீழாக சரிந்த தங்கம் விலை..!
நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.13,210க்கும் சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் ரூ.13,015க்கும் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.10,650க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.85,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.200க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




