--- --:--:-- --

ரூ.1 கோடி இழப்பீடு கோரி நிர்மல் குமாருக்கு அ.தி.மு.க நோட்டீஸ்!

13

தமிழ்நாட்டில் சமீபத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், த.வெ.க வேட்பாளர்கள் சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றனர். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், அ.தி.மு.க-வின் சொத்துகளை எடப்பாடி பழனிசாமி அபகரிப்பதாகவும், அவரது தலைமையில் அ.தி.மு.க ஒரு லெட்டர் பேடு கட்சியாக மாறிவிட்டதாகவும் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

 

 

 

இந்த கருத்துகள் எடப்பாடி பழனிசாமிக்கும் அ.தி.மு.க-வுக்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அ.தி.மு.க தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சர் நிர்மல்குமார் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அ.தி.மு.க சார்பில் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெயரில் வழக்கறிஞர் இன்பதுரை நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

 

 

கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu மற்றும் @AIADMKOfficial குறித்து, சட்டம் மற்றும் மின்துறை அமைச்சர் திரு. C.T.R. நிர்மல்குமார் தெரிவித்த பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுகளை 7 நாட்களுக்குள் திரும்பப் பெற்று, பொதுவெளியில் அவர் மன்னிப்புக் கோரி, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில், சட்டமன்ற கொறடா திரு. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி பெயரில் சட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

 

 

இது தொடர்பாக அ..திமு.க வழக்கறிஞர்கள் அணிச் செயலாளர் இன்பதுரை எம்.பி. தமது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சட்டம் மற்றும் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் தெரிவித்த பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுகளை 7 நாட்களுக்குள் திரும்பப் பெற்று, பொதுவெளியில் அவர் மன்னிப்புக் கோரி, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில், சட்டமன்ற கொறடா அக்ரி. கிருஷ்ணமூர்த்தி பெயரில் சட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon