--- --:--:-- --

காதலித்த 2 ஆண்டுகளில் பல இன்னல் – குமுறிய நடிகை அனுபமா

3

லையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகம் ஆன இவர், தமிழில் கொடி, டிராகன் மற்றும் பைசன் காளமாடன் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உலா வருகிறார்.

 

இந்த நிலையில் தனது காதல் அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ள அவர், பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக கூறியுள்ளார். தனது காதலன் அவரின் முழு கட்டுப்பாட்டுக்குள் தன்னை வைத்திருந்ததாகவும், அவரது குடும்பத்தினர் பழகிய மூன்று மாதங்களுக்குள் திருமண நிச்சயதார்த்தத்திற்கு கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஆனால், காதலன் வயதில் குறைந்தவர் என்பதால் அதை தவிர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனது காதலன் பிறரை அடிமைப்படுத்தி வைக்கும் குணாதிசயம் கொண்டவர் என்பதை அறிந்து அவரிடம் இருந்து விலகியதாக அனுபமா கூறியுள்ளார். ஆனால், தனது காதலன் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

 

ஒருநாள் தனது காதலர் ரெமோவாக இருப்பதாகவும் அப்போது இப்படியான காதலரா நமக்கே நினைக்க தோன்றும் என்றும் அதுவே மறுநாள் அந்நியனாக மாறிவிடுவார், அதற்கு மறுநாள் குழந்தை போல் மன்னிப்பு கேட்பார் என்றும் இது தான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மாறி மாறி நடந்து வந்தது என்றும் அனுபமா பரமேஸ்வரன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

 

சில தினங்கள் முன் தான் காதல் முறிவுற்றதாகவும் தனக்கு விடுதலை கிடைத்ததாகவும் அனுபமா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஊடகத்தில் தனது காதல் தோல்வி குறித்து பேசியிருப்பது தமிழ் சினிமாவில் கவனம் பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon