--- --:--:-- --

சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு தடுப்பூசி முகாம்..!

6

சென்னையில் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அடுத்த 75 வேலை நாட்களுக்குள் 2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

நாளொன்றுக்கு ஒரு குழு 100 நாய்கள் வீதம், மொத்தம் 30 குழுக்கள் மூலம் தினம் 3,000 நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாம் மூலம் வளர்ப்பு நாய் மற்றும் பூனைகளின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கடந்தாண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கிய முகாமில் இதுவரை 1,47,545 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon