--- --:--:-- --

மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு..!

7

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். அதன்படி வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பஸ்-ரெயில் நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் 255 ‘டாஸ்மாக்’ கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவிடப்பட்டிருந்தார்.

 

 

மூடப்படும் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேறு கடைகளுக்கு பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக்’ பார்களில் சட்டவிரோத மது விற்பனை தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டது.

 

 

இதனிடையே, பல்வேறு கட்சி தலைவர் டாஸ்மாக் கடை மூடல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில், தமிழக அரசு தற்போது மூடப்பட்ட டாஸ்மாக் கடையின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon