மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 12வது நாளாக தடை..!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவிப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருதி அருவியில் இறங்கிக் குளிப்பதற்கான தடை இன்று (15.06.2026) 12-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், நீர்வீழ்ச்சியின் அழகைக் தூரத்திலிருந்து கண்டு ரசிப்பதற்கும், மணிமுத்தாறு அருவிப் பகுதியை நேரில் பார்வையிடுவதற்கும் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




