--- --:--:-- --

ஆதவ் அர்ஜுனா நாவடக்கத்தோடு பேசுங்கள் – அக்ரி கிருஷ்ண மூர்த்தி ஆவேசம்

4

அ.தி.மு.க, தி.மு.க உடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு அமைக்க முயன்றதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் ஒரு தவறான தகவலாகும். எந்த நேரத்திலும் அ.தி.மு.க மனதளவில் கூட தி.மு.க-வை ஏற்றுக் கொண்டது இல்லை.

 

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தி.மு.க-வை கடுமையாக சாடியவர். தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது கூட தி.மு.க ஆட்சியில் நடந்த குற்றங்களை தோலுரித்து காட்டியவர் எடப்பாடி பழனிசாமி. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதுராந்தகத்தில் பேசிய போது அ.தி.மு.க, தி.மு.க உடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததாக தவறான சொல்லை பயன்படுத்தி வருகிறார்.

 

 

ஆதவ் அர்ஜுனா அவர்களே அமைச்சராக இருக்கிறீர்கள். நாவடக்கத்தோடு பேசக் கற்றுக்கொள்ளுங்கள் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon