--- --:--:-- --

மே தினம், வார இறுதி நாட்கள்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

10

மே தினம், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு வரும் 30-ந்தேதி 475 பேருந்துகளும், மே 1, 2 ஆகிய தேதிகளில் 315 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

 

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு வரும் 30-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை 160 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து தலா 14 பேருந்துகளும், ஈரோடு மற்றும் கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை (மே 3-ந்தேதி) மீண்டும் ஊர் திரும்ப வசதியாக அனைத்து இடங்களில் இருந்தும் 615 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதுவரை சுமார் 27,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகள் www.tnstc.in இணையதளம் மற்றும் Mobile செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon