--- --:--:-- --

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!

1

சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை, நேற்று (ஏப்.24) நிலவரப்படி அதிரடியாக குறைந்தது.

 

 

இந்த நிலையில், இன்று (ஏப்.25) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,850க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை நேற்று ரூ.5 குறைந்த நிலையில், இன்று 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon