--- --:--:-- --

காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம்..!

2

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வரவுள்ளதால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மின்மாற்றி, மின்கம்பங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் பிரபுவிற்கு ஆதரவாக நாளை (10.04.2026 – வெள்ளிக்கிழமை) அக்கட்சியின் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே, மாநகராட்சி அலுவலகம், கண்ணதாசன் மணிமண்டபம் பகுதியில் தேவர் சிலை நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தவெகவினர் அனுமதி கேட்டிருந்தனர்.

 

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள பகுதிகளில் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் தேவகோட்டை கோட்டாச்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் இன்று அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்சாரம் செய்ய உள்ள தேவர் சிலை பகுதியில் உள்ள மின்மாற்றி, மின் கம்பங்கள், திறந்த வெளி சாக்கடை கால்வாய், உயரமான மரங்கள் தகர சீட் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon