--- --:--:-- --

த.வெ.க. நிர்வாகிகளின் புகாருக்கு வேலூர் மாவட்ட காவல்துறை மறுப்பு

9

விஜய்யின் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக அந்த நிர்வாகிகளால் கூறப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

 

உண்மையில், நிகழ்ச்சிக்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் மனு அளிக்கப்பட்டது. மேலும், 4,900 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அதற்கு மாறாக 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் அரசாணையை மீறிய செயல் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon