மகளிர் உரிமைத் தொகை நிறுத்தினால் தமிழகம் கொந்தளிக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
மகளிர் உரிமைத் தொகை துல்லிய தாக்குதல் அல்ல தாயுமானவரின் அன்பான அரவணைப்பு எனவும், மகளிர் உரிமைத் தொகையை தடுத்து நிறுத்தினால் தமிழகம் கொந்தளிக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாக கூறினார்.சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அவர், திமுக ஆட்சி கடைக்கோடி மக்களின் நலன் காக்கும் ஆட்சியாக இருந்துள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டு சாதி மத மோதல் தமிழ்நாட்டில் ஏதுமில்லை என கூறினார்.
மேலும், மனித வளம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தொடர்ந்து கொண்டுள்ளதாக கூறிய அவர், பல மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சரின் திறமையான நிர்வாகம் குறித்து நாடு அறிந்து கொள்ளும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றதாக கூறிய அவர், அந்த நேரத்தில் 6:32 மணிக்கு கணக்கில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதாகவும், இது துல்லிய தாக்குதல் அல்ல தாயுமானவரின் அன்பான அரவணைப்பு என்றும் தெரிவித்தார்.
மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாயை நிறுத்த முயற்சி செய்தால் நான் ஐந்தாயிரம் ரூபாயாக கொடுப்பேன் என்று முதலமைச்சர் எடுத்த முடிவை இன்று மகளிர் மனம் குளிர்ந்து பாராட்டி வருவதாக கூறிய அவர், மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால், தமிழ்நாடு கொந்தளிக்கும் என்றும், அந்தக் கொந்தளிப்பு உணர்வு இருக்கும் வரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




