திருவாடானை அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் ..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில், மீண்டும் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. தொடர்ந்து கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தனர்.

 

தமிழ்நாட்டில் உள்ள 165 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 8,000 க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் உயர்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி 1996 முதல் 2025 வரை பல்வேறு காலகட்டங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஒன்பதாம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தோம். கௌரவ விரிவுரையாளர்களின் ஐந்து அம்ச கோரிக்கைகளான பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயம் செய்த 57 ஆயிரத்து 700 ரூபாய் மற்றும் 12 மாத ஊதியம், அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம், மகப்பேறு விடுப்பு, ஓய்வு பெறும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை ரூபாய் 25 லட்சம் வழங்குதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்றாவது நாளாக கண்ணில் கருப்பு துணி கட்டி பணி புறக்கணிப்பு போராட்டம்
கல்லூரி முன்பாக கிளைத்தலைவர் பேராசிரியர்  இராமமூர்த்தி தலைமையில் நூதன முறையில்   நடைபெற்றது.

 

இதில் கல்லூரியில் உள்ள 32 கௌரவ விரிவுரையாளர்களும்
கலந்து கொண்டனர். சட்டமன்ற  கூட்டத்தொடரில் அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும் என கூறுகின்றனர்..