தி.மு.க இன்னும் குழு அமைக்கவில்லை – கிரிஷ் ஜோடங்கர்

மிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோடங்கர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். நாங்க தி.மு.க-வை குற்றம் சாட்டவில்லை. உண்மையைத்தான் சொல்கிறோம். கடந்த 70 நாட்களாக காத்திருக்கிறோம். நாங்க பலமுறை முயற்சி செய்தோம். முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டோம்.

 

மேலும் விளக்கினோம் ஏன் முன்கூட்டியே பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என. ஆரம்பத்திலேயே பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என விரும்பினோம் என தெரிவித்தார்.