--- --:--:-- --

தமிழ்நாட்டில் இந்த 9 மாவட்டங்களில் பனிமூட்டம் நீடிக்கும்..!

2

தமிழ்நாட்டில் வரும் 11ஆம் தேதி வரை வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பனிமூட்டம் நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், வறண்ட வானிலையே நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும், 9 மாவட்டங்களில் வரும் 11-ஆம் தேதி வரை அதிகாலை வேளையில் பனிமூட்டம் நீடிக்கும் என தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் நிலவும் என குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் வரும் 11-ஆம் தேதி வரை அதிகபட்ச இயல்பு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon