--- --:--:-- --

திருவாடானை: தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி முகாம்

திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் தனியார் பாதுகாவலர்களுக்கான (Private Security Guards) தீ பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

 

இந்த பயிற்சி 09.02.2026 (திங்கட்கிழமை)நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முன்னிலையில் பின்வரும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

 

தீயணைப்பு கருவிகளை கையாளுதல்: பல்வேறு வகையான தீயணைப்பான்களை (Fire Extinguishers) அவசர காலங்களில் எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது?முதலுதவி முறைகள்: தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உடனடி முதலுதவி சிகிச்சை குறித்த விளக்கம்.

 

தற்காப்பு நடவடிக்கைகள்: கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போது பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது (Evacuation Drill) மற்றும் தீ பரவாமல் தடுக்கும் முறைகள்.செயல்முறை விளக்கம்: சமையல் எரிவாயு கசிவு மற்றும் மின் கசிவு காரணமாக ஏற்படும் தீயை அணைப்பது குறித்த நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.

 

இதில் தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாவலர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தீ விபத்தில்லா திருவாடானையை உருவாக்க ஒத்துழைக்குமாறு தீயணைப்புத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon