--- --:--:-- --

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்தி சிதம்பரம் தரிசனம்..!

“திமுக இன்னும் குழு அமைக்கவில்லை” எனப் பேட்டிராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள அருள்மிகு சினேகவல்லி அம்பாள் உடனமர் ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று தனது ஆதரவாளர்களுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

 

தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:கூட்டணி மற்றும் இடப்பங்கீடு: “நாங்கள் இந்தியா (INDIA) கூட்டணியில் திமுக தலைமையின் கீழ் தான் உள்ளோம். கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட குழுவே முடிவு செய்யும். தற்போதைய நிலையில், திமுக சார்பில் இதற்கான குழு இன்னும் அமைக்கப்படவில்லை.

 

“செய்தியாளர்கள் திமுகவினரால் தாக்கப்படுவது குறித்துக் கேட்டபோது, “அத்துமீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

திமுகவுக்கு அழுத்தமா?தமிழகத்தில் தவெகா சார்பில்காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது என்று பேசப்படுவது திமுகவுக்குத் தரப்படும் அழுத்தமா எனக் கேட்டதற்கு, “அப்படியெல்லாம் யாரும் யாருக்கும் அழுத்தம் கொடுக்க முடியாது. நாங்கள் உறுதியாக திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் தான் நீடிக்கிறோம்” என்று அவர் பதிலளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon